சனி, 10 ஏப்ரல், 2010

எப்படி இது சாத்தியம்

2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சன் குழும அதிபர் கலாநிதி மாறன் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார்
 
இத்தனை வெற்றிகளுக்கு மத்தியில் படு அமைதியாக, நிதானமாக இருக்கிறார் கலாநிதி மாறன். எப்படி இது சாத்தியம் என்று அவரிடம் கேட்டபோது, நான் போட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் வளருவற்கு முன்பே வீழ்த்தி விட விரும்புவேன். அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன் என்கிறார்
1993ம் ஆண்டு 25 பேர் அடங்கிய குழுவுடன், 86 ஆயிரம் டாலர் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது சன் டிவி. அந்த 25 பேரில் பலரும் கலாநிதியுடன் லயோலா கல்லூரியில் படித்த நண்பர்கள். அவர்களில் 20 பேர் இன்னும் கலாநிதியுடன் இருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் சன் டிவியை ஆரம்பித்து விட்ட கலாநிதி மாறன் அதன் ஒளிபரப்புக்காக முதலில் அணுகியது ஜீ டிவியை. அவர்களின் டிரான்ஸ்பான்டர்கள் மூலம் பிற்பகலில் மட்டும் ஒளிபரப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரினாராம் கலாநிதி.

இதற்காக சுபாஷ் சந்திராவை பார்க்க சென்றிருந்தார் கலாநிதி. ஆனால் அவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மாறாக ஒரு சாதாரண அதிகாரியைத்தான் கலாநிதியால் பார்க்க முடிந்தது. அந்த அதிகாரியோ, தமிழ் நிகழ்ச்சியையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கூறி கலாநிதியின் கோரிக்கையை நிராகரித்து விட்டாராம்.

மனம் தளராத கலாநிதி அப்போது ஜீ டிவிக்குப் போட்டியாக இருந்த சிறிய சேனலான ஏடிஎன்-ஐஅணுகினார். அவர்களோ 3 மணி நேரம் ஸ்லாட் தருவதாக கூறினார். ஆனால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க மாட்டீர்கள் என்று அவ நம்பிக்கையுடன் கூறினார்களாம் கலாநிதியிடம்.

ஆனால் கலாநிதிக்கு நம்பிக்கை இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ் மொழிச் சானலை நிச்சயம் நடத்த முடியும், இந்தி ஆதிக்கத்தைத் தாண்டி வளர முடியும் என்று நம்பினார். மேலும் தென்னிந்தியர்களுக்குப் பெரும்பாலும் தமிழ் புரியும் என்ற காரணத்தினால் தமிழா, இந்தியா என்று வரும்போது நிச்சயம் தமிழைத்தான் அவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையம் கலாநிதியிடம் இருந்தது. அதுதான் கடைசியில் ஜெயித்தது.
.

கருத்துகள் இல்லை: