வியாழன், 3 ஜூன், 2010

நன்றிகள் சொல்வதற்கு

கனவுகளெல்லாம் கனவுகளாகவே
கரைந்து கலைந்தபோது
சிதைந்துபோன வாழ்வை எண்ணி
கலங்கித் தவித்தபோது
முடிந்ததை எண்ணிக் கலங்காமல்
இடிந்துபோய் மூலையில் இருக்காமல்
அசைவுகள் இன்னமும் இருப்பதற்கு
அன்பு  சார்   நீங்கள      தானே காரணம்
சோதனை வேளையிலே
தோளுக்குத் தோள் கொடுத்த
உங்களுக்கு
நன்றிகள் சொல்வதற்கு
வார்த்தைகளைத் தேடுகிறேன்!!!

புதன், 26 மே, 2010

படித்தது,,ரசித்தது , ருசித்தது:

படித்தது:

யுவகிருஷ்ணா :   மே  மாதம்  நான் அனைத்து பதிவகளும்  படிக்க  நன்றாக உள்ளது . பய புள்ள  நல்லாத்தான் எழுதுகிறது.


ரசித்தது : பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!
நன்றி :யூவ கிருஷ்ணா .

ருசித்தது:
திருநெல்வேலி  வண்ணர்பேட்டை ராம்ப்ரசாத் ஹோட்டல்  சாயுங்காலம் 6 மணிக்கு மேல chelli porroto . நல்ல இருக்கு .மசாலா கொஞ்சாம்  அதிகம் . பாசகார பயபுள்ள ஹோட்டல்.

திங்கள், 24 மே, 2010

இதுதானோ..?

மங்களூர் விமான விபத்து செய்தி மனதை உலுக்கியது. இறந்தவர்களின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களது பாட்டி ஒருவர் இறந்ததுக்காக கிளம்பி வந்த நேரத்தில் இக்கோர விபத்து நடந்திருக்கிறது. அதே போல தன் தந்தையின் சாவுக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைத்து வந்த ஒருவரும் இறந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். முடிந்த வரை அதிகப்படுத்தியே செய்திகளில் சொல்கிறார்கள். ஒரு வேலை அதிகமாச் சொல்வதுதான் பத்திரிக்கை, மற்றும் செய்திகளை பார்க்க வைக்கும் உத்தியோ.. பர்வர்ஷன் என்பது இதுதானோ..?
நன்றி :cabile சங்கர்

ஞாயிறு, 23 மே, 2010

 படம் பார்த்து  ............முடியலிங்க ???

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சுறா- பட விமர்சனம்


சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் நடிகர் விஜய் நடித்த சுறா படம் இன்று உலக முழுவதும் ரிலீஸ் ஆனது. 
`சுறா' விஜய்க்கு 50வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காலையிலேயே திரையரங்குகளில் காத்திருந்தனர்.
படம் துவக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சிகளையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் கதை சென்றது. விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் வந்த தால் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் புல்லானது. டிக்கெட் கிடைக்காதவர்கள் நீண்ட வரிசையில் அடுத்த காட்சிக்காக காத்திருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்தனர்.  

இது சன் நியூஸ் .....
ஆண்டவா தமிழ் நாட்டே  காப்பாற்று ????????????/

பட விமர்சனம்:

 எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.
இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. 



எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.
அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.
இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.


இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.


கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.


வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது..

விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
வேட்டைக்காரன்  பார்ட்  2
நன்றி : தினகரன் 
நன்றி :தட்ஸ் தமிழ்  

சனி, 24 ஏப்ரல், 2010

இருட் டு கடை

திருநெல்வேலி  பாலம் ஸ்ரீபுரம்  போஸ்ட் ஆபீஸ்  எதிர 7  மணிக்கு மேல  ஒரு நைட் ஹோட்டல்  ஒன்று
உள்ளது . ஒன்லி சைவம் . அப்பா மகன்  நடத்துகிறார்கள் .இங்க அப்படி என்ன  ஸ்பெசல் . சீப்பு ரேட் !!!!
ரூபாய் 20 க்கு , வயறு ரொம்ப  சாப்டலாம்.  ருசி யும்  நல்ல  இருக்கு .முட்டை தோசை. .இட்லி . அப்புறம்
ரூபாய் 5 க்கு மொச்சி பயிறு  குட்டு சூபரு. அதை விட  கவனிப்பு நல்ல இருக்கு . குறிப்பு : ஹோட்டலுக்கு நேம் போர்டு  இல்லை . இங்க இருட் டு கடை  ( அல்வா ) க்கு கூட  போர்டு  இல்லை. நல்ல இருந்தா விளம்பரம்  எதுக்கு !!!

ரெட்டச்சுழி படம்


தமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம்

ரெட்டச்சுழி  படம் போய் பாக்கணும்-னு நெனச்சேன். கேபிள் சங்கர்

திரை விமர்சனம் படிசிசுட்டு  படம் மொக்கையாகிவிட்டதே என்ற வருத்தம்.

.http://cablesankar.blogspot.com/2010/04/blog-post_24.html

 


புதன், 21 ஏப்ரல், 2010

கல்யாணம்

 வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1.
படிப்பு
2.
விளையாட்டு
3.
பொழுது போக்கு,காதல்
4.  கல்யாணம் 
5.
6.
7.

 
 ஹலோ... என்ன தேடுறீங்க 

கல்யாணம்  வந்த பிறகுதான் எல்லாமே கண்டமாகி   போயிருமே...!
வேலை நேரத்துல வேலைய பார்காம என்ன இது கப்பி தனமா ... 
போய் வேலைய பாருங்கையா

திங்கள், 19 ஏப்ரல், 2010

மிட் நைட் ட்ரெயின்

ரொம்ப நாளா நான் படுற கஷ்டம் . திருநெல்வேலி இல்  இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின்
கொல்லம் பாசஜ-  சரியாய்  12 .30 கு  எட்த்து காலை 6  மணிக்கு மதுரை போகும் .மனிக்கவும் நகரும் .
அதை ஊர்தி என்று  சொல்லலாம் . உங்களுக்கு  வேளை  வெட்டி யெல்லாமா !!!!!!!!! இருந்தா போய்
பாருங்க .இந்தியா எப்படி  கஷ்டமா  வளருதுன்னு  அனுபவப் பூர்வம   தெரியம் .ஆனாலும்  ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE  ஜஸ்ட்  23 /- மட்டும.  நீங்க சும்மா ட்ரெயின்  பினானாடி    வாக்கிங்  போன கூட
மதுரை வந்துரும் .

சனி, 17 ஏப்ரல், 2010

முடியாது!!!!!!!!!


என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,  
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி 
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...