வியாழன், 3 ஜூன், 2010

நன்றிகள் சொல்வதற்கு

கனவுகளெல்லாம் கனவுகளாகவே
கரைந்து கலைந்தபோது
சிதைந்துபோன வாழ்வை எண்ணி
கலங்கித் தவித்தபோது
முடிந்ததை எண்ணிக் கலங்காமல்
இடிந்துபோய் மூலையில் இருக்காமல்
அசைவுகள் இன்னமும் இருப்பதற்கு
அன்பு  சார்   நீங்கள      தானே காரணம்
சோதனை வேளையிலே
தோளுக்குத் தோள் கொடுத்த
உங்களுக்கு
நன்றிகள் சொல்வதற்கு
வார்த்தைகளைத் தேடுகிறேன்!!!