வெள்ளி, 9 ஏப்ரல், 2010

வில்லியம் ஷேக்ஸ்பியர்:  
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்  
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 
 

பொன்மொழிகள்

லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.






ஆலன் ஸ்டிரைக்:  
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

சந்தோசம் சந்தோசம்


ந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி


கவலையில் உள்ளமனிதர்களை சிரிக்கவைத்த மனிதன் அழவைத்துவிட்டு சென்று விட்டான்

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.
நாகராஜ் சார் உங்களை மறகக  முடியவேல்லை .

its meeeeeeee

சம்சன் பெலிக்ஸ்

நானும்
என் நண்பன்
சம்சன் பெலிக்ஸ் 
ஒரு மாலை ஆபீஸ்
சந்டிப்ப்பு .

ஆபத்துகளுள் பேராபத்து எது?


நடப்பது நடக்கட்டும் என்று நடக்கப் போகும் ஆபத்திலிருந்து ஒதுங்குவதுதான் ஆபத்துகளுள் பேராபத்து.
இப்போது சென்னையில் டைடல் பார்க் இருக்கிறதே இந்த இடத்தை என்னால் மறக்கவே முடியாது. காரணம் இங்கு நான் சந்தித்த ஒரு விபத்துதான். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த டைடல் பூங்கா சாலை வெறும் கருவேலங்காடாக இருந்த காலம் அது.
நடுவில் 30 அடி அகலத்தில் தார்ச்சாலை. இரு புறமும் மிக நெருக்கமாய்க் கருவேல மரங்கள். திடீரென இவற்றின் நடுவே இருந்து சைக்கிளில் ஓர் இளைஞர் வெளிப்பட்டார். நிற்கவேயில்லை. இருபுறமும் பார்க்காமல் மறுபுறம் கடக்கிறார். இது நான் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. என் வாகனமோ நெருங்கி விட்டது. பிரேக் அடித்தாலும் தவிர்க்கமுடியாத விபத்து.
இப்போது எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் சைக்கிளின் முன்டயரில் மோதுவதா, நடுவில் மோதுவதா, பின்டயரில் மோதுவதா என்பதுதான். வேறு வழியே இல்லை.
என் அனுபவம் அப்போது கைகொடுத்தது. நடுவில் தட்டினால் ஆள் காலி! முன் டயரில் தட்டினால், தட்டிய வேகத்தில் நம் வண்டிக்குள் வந்து விழுவான். பின் டயரில் தட்டினால் வாகனத்திற்கு வெளியில் போய் விழ வாய்ப்பு. இதன் மூலம் மறுபடி அந்த இளைஞர் மீது வாகனம் ஏறி ஓடிவிடாது.
எனவே பின் டயரில் மோதுவது என முடிவு செய்தேன். (அடப்பாவி மனுஷா! என்கிறீர்களா? என் நிலை எனக்கல்லவா தெரியும்?) அதன்படி மோதினேன். குறைந்த அடிகளோடு தப்பித்தார்.
இந்த நேரத்தில் நான் எதிர்கொள்ளும் ஆபத்து உறுதி என்று நான் ஸ்டியரிங்கை விட்டு விட்டு, ஐயோ! என்று கண்களை மூடிக்கொண்டு விட்டால் அது எவ்வளவு பேராபத்தாகியிருக்கும்!
இப்படித்தான் பல மனிதர்கள் தவறு செய்கிறார்கள். அதிலிருந்து விலகி ஓடுவதாக எண்ணிக் கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அல்லது விஷயம் மேலும் முற்றும் வகையில் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறார்கள்.
மனபலம் தேவையென்றால் நம் நல விரும்பிகளைக் கலந்தாலோசிக்க வேண்டும். விரும்பி ஆள் பலம் தேவையென்றால் அதைக் கவனிக்க வேண்டும். நடப்பது நடக்கப் போகிறது என்றாலும் சேதாரம் குறைவாக இருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டுமே தவிர, ஓடி ஒளியக் கூடாது

தோல்வியை விட மோசமானது எது?

தோல்வியை விட மோசமானது எது?
தோல்வி என்பது பல நேரங்களில் கேவலமாகவும் அவமானகரமானதாகவும் நம்மவர்களால் எடுத்துக் கொள்ளவும் பார்க்கவும் படுகிறது.
தோல்வி, சீண்டப்பட்ட மரவட்டை போல், நத்தை போல் மனத்தை சுருளச் செய்தும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளச் செய்தும் வேடிக்கை பார்க்கிறது.
இதுகூடப் பரவாயில்லை. சிலரை இந்த உணர்வு தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இன்று டென்னிஸ் உலகின் முடிசூடாத மன்னனாக விளங்கும் ரோஜர் பெடரர் பல வெற்றிகளைக் குவிக்கிறார். ஆனால் இவரது வெற்றிகள் எல்லாம் சுலபத்தில் வாய்த்தவையோ வந்தவையோ அல்ல.
சில வெற்றிகள், கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிப் போய்த் தொட்டுவிட்டுப் பிறகு கைக்கு வந்தவை. 6-4; 6-4; 6-6 என்று முடியப் போகிற தருணத்தில் 6-7; 2-6; 3-6 என்று அடியோடு திரும்பியவை.
இதற்குக் காரணம் ரோஜரின் போராடும் குணம்தான். இவரது வெற்றித் திறமையைவிட கடைசி நிமிடம்கூட விட்டுக் கொடுக்காத போராட்டமே என்னைப் பல நேரங்களில் கவர்ந்திருக்கிறது.
தோல்வியை நெருங்குகையில் ‘ஐயோ! தொலைந்தோம்!’ என்று எதிர்மறையாக எண்ணுவதை விட்டுவிட்டு, ‘இதில் மட்டும் ஜெயித்துவிட்டால் எப்படி இருக்கும்?” என்று சிந்திக்க ஆரம்பித்து, வெற்றியின் பலன்களை அடைவதாகவும் எண்ணிப் பார்த்தால் நமக்குள் உறங்கிக் கிடக்கும் மகத்தான சக்தி தட்டி எழுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது.
தோல்வியின் விளிம்பில் அதைத் திசை திருப்பவல்ல ரோஜா பெடரர் இந்த உத்தியைத்தான் கையாள்கிறாரோ என நான் ஊகிக்கிறேன். நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்த பிறகும் மேற்கொள்ளப்படும் முயற்சி இருக்கிறதே, இது நமக்கு இதுவரை கிடைத்திராத புதிய அனுபவமாக இருக்கும்.
ஒரு முதல் தர ஆட்டக்காரருக்கு எதிராக ஒரு கற்றுக்குட்டி ஆட்டக்காரர் எடுக்கும் ஒரு பாயிண்ட் கூடப் பார்வையாளர்களால் பெரிய அளவில் கைதட்டி வரவேற்கப்படும். இந்த அனுபவம் ஒரு கற்றுக் குட்டி ஆட்டக்காரருக்கு மகத்தான மன எழுச்சியைத் தரவல்லது.
ஆக, எதிரி எவ்வளவு பலமானவன் என்பது முக்கியமல்ல. நம் முயற்சி எந்த அளவு உண்மையானதாக இருந்தது என்பதே முக்கியம்.
இந் நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆம்! தோல்வியைவிட மோசமானது முயற்சி செய்யாமல் இருப்பதே!

வாண்டாம் பார்காதிங்க சொல்லிபுட்டன் அம்புட்டுத்தான் .


ஜெகதா

மதுரை: ஏட்டு மூலம் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமங்கலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி டிரைவரிடம் வாகன சோதனையில் ஈடுபட்ட பொன்ராஜ் என்ற ஏட்டு லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கியது தெரிந்து போலீஸ் உயர் அதிகாரி உ‌த்தரவின் பேரில் பொன்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் இதுபற்றி விசாரணை நடந்தபோது, திருமங்கலம் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆன்டனி ஜெகதா சொல்லித்தான் பொன்ராஜ் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஜெகதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்